விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. தொடரின் சிறந்த கோல் விருதை வென்ற தமிழர்!

ஆசிய சாம்பியன்ஸ்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 - 3 என்ற கணக்கில் மலேசியாவை விழ்த்தி, இந்தியா கோப்பை கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. தொடரின் சிறந்த கோல் விருதை வென்ற தமிழர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4 வெற்றி 1 டிராவுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. தொடரின் சிறந்த கோல் விருதை வென்ற தமிழர்!

மலேசிய அணி 4 வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடமும், தென் கொரியா ஒரு வெற்றி , 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும், ஜப்பான் அணி ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அதே நேரம் தென் கொரியா,ஜப்பான் அணிகளை போல ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியை பெற்று இருந்தாலும் அதிக கோல்கள் வாங்கியதால் பாகிஸ்தான் அணி ஐந்தாம் இடம்பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. சீன அணி ஒரு டிரா, 4 தோல்வியுடன் கடைசி இடம் பிடித்தது.

அதன் பின்னர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரிய அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. தொடரின் சிறந்த கோல் விருதை வென்ற தமிழர்!

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசிய அணியை சந்தித்தது. இதில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்த நிலையில் வெற்றிபெறப்போவது யார் கேள்வி எழுந்தது. எனினும் இறுதியில் இந்திய அணி 4 - 3 என்ற கணக்கில் மலேசியாவை விழ்த்தி, இந்தியா கோப்பை கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில், ஜப்பான், கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற வரலாற்றை இந்திய அணி படைத்தது. இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் வெற்றிக் கோப்பையை வழங்கி, இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்தினார்.  இந்த தொடரின் சிறந்த கோல் அடித்த வீரர் விருது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீரர் கார்த்திக்கு வழங்கப்பட்டது

banner

Related Stories

Related Stories