விளையாட்டு

"இனி இதைசெய்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து கிரிக்கெட் ஆடமுடியும்" - பும்ராவுக்கு மெக்ராத் அறிவுரை !

பும்ரா ஏதேனும் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே அவரால் தொடர்ந்து கிரிக்கெட் ஆடமுடியும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் கூறியுள்ளார்.

"இனி இதைசெய்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து  கிரிக்கெட் ஆடமுடியும்" - பும்ராவுக்கு மெக்ராத் அறிவுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. எனினும் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

"இனி இதைசெய்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து  கிரிக்கெட் ஆடமுடியும்" - பும்ராவுக்கு மெக்ராத் அறிவுரை !

இந்த நிலையில், பும்ரா வரும் காலத்தில் ஏதேனும் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே அவரால் தொடர்ந்து கிரிக்கெட் ஆடமுடியும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் கூறியுள்ளார். பும்ரா குறித்து பேசிய அவர், "இந்திய அணிக்காக சிறப்பான ரெக்கார்டை பும்ரா வைத்துள்ளார். ஆனால், அவருடைய பந்து முறையால் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்.

அவர் நல்ல உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரால் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும். ஐபிஎல் தொடர் பின்னர் சர்வதேச தொடர் என இப்போது வீரர்களுக்கு ஓய்வே கிடைக்காத நிலை இருக்கிறது. இதன் காரணமாக பும்ரா வரும் காலத்தில் ஏதேனும் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி செய்தால் அவரால் தொடர்ந்து விளையாட முடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories