விளையாட்டு

"ஒருவேளை இங்கிலாந்து செய்ததை நாம் செய்தால் 4,5 பேர் அணியிலிருந்து நீக்கப்படுவர்" -அஸ்வின் கூறியது என்ன ?

bazball பாணியில் நமது வீரர்கள் ஆடினால் அணியில் இருந்து குறைந்தபட்சம் 4,5 பேர் அணியில் இருந்து நீக்கப்படுவர் என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

"ஒருவேளை இங்கிலாந்து செய்ததை நாம் செய்தால் 4,5 பேர் அணியிலிருந்து நீக்கப்படுவர்" -அஸ்வின் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தபோது, bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

"ஒருவேளை இங்கிலாந்து செய்ததை நாம் செய்தால் 4,5 பேர் அணியிலிருந்து நீக்கப்படுவர்" -அஸ்வின் கூறியது என்ன ?

இந்த நிலையில், bazball பாணியில் நமது வீரர்கள் ஆடினால் அணியில் இருந்து குறைந்தபட்சம் 4,5 பேர் அணியில் இருந்து நீக்கப்படுவர் என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார். தனது youtube சேனலில் இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து கடைப்பிடிக்கும் bazball பாணியை இந்திய சமூகம் ஏற்காது. ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து போல் பாஸ்பால் அதிரடி பேட்டிங்கை கடைப்பிடிக்கிறது என்றால் சில வீரர்கள் 2 போட்டியில் ரன் அடிக்காமல் ஆட்டமிழந்தாலோ, அல்லது அணி தோல்வியை சந்தித்தாலோ பல்வேறு விமர்சனங்கள் வரும்.

விளையாடும் 11 வீரர்களில் குறைந்தது 4 வீரர்களையாவது அணியை விட்டு நீக்கி விடுவோம். இங்கிலாந்து நிர்வாகம் bazball பாணியை ஆதரித்து, வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறது. வீரர்கள் போட்டியில் வெற்றிபெற்றாலும், தோல்வியைத் தழுவினாலும் அணி நிர்வாகம் அவரை கைவிடாது. ரசிகர்களும் போட்டியில் தோற்றாலும் அணியை ஆதரிப்பர். ஆனால் அது இங்கு நடக்காது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories