விளையாட்டு

நீண்ட நாள் நண்பரின் ஓய்வு குறித்த கேள்வி.. தாங்க முடியாமல் கண்கலங்கிய ஆண்டர்சன்.. வைரலான வீடியோ !

இங்கிலாந்து வீரர் பிராட்டின் ஓய்வு குறித்த கேள்விக்கு ஆண்டர்சன் கண்கலங்கிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

நீண்ட நாள் நண்பரின் ஓய்வு குறித்த கேள்வி.. தாங்க முடியாமல் கண்கலங்கிய ஆண்டர்சன்.. வைரலான வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2007-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் மைக்கேல் வாகன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். அப்போதில் இருந்து இப்போதுவரை இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரராக ஸ்டூவர்ட் பிராட் திகழ்ந்து வருகிறார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் இவரின் பந்தில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து விலாச, இவரின் கதை முடிந்தது என்றே கருதப்பட்டது. ஆனால், அதன்பின்னர் தான் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணியில் மிக சிறந்த வீரராக உருவெடுத்தார். அதிலும் இவரும் ஆண்டர்சனும் வெகு நாட்களாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு முன் முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708), ஜேம்ஸ் ஆண்டர்சன் (688) இந்தியாவின் அனில் கும்ப்ளே (619) மட்டுமே இந்த சாதனையை படைத்து இருந்தனர்.

நீண்ட நாள் நண்பரின் ஓய்வு குறித்த கேள்வி.. தாங்க முடியாமல் கண்கலங்கிய ஆண்டர்சன்.. வைரலான வீடியோ !

இந்த நிலையில், ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஸ்டூவர்ட் பிராட் இந்த டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி எனவும், இதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார். இது குறித்து பேசிய அவர், சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்துவந்தேன். எனது கடைசி போட்டி ஆஷஸில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதால் இதனை அறிவித்து இருக்கிறேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்"என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் பிராட்டின் நீண்ட நாள் நண்பரும், சக பந்துவீச்சாளருமான ஆண்டர்சனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், " ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார்" என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கின. இதனால் மேற்கொண்டு பேசாமல் அவர் சென்றுவிட்டார். இந்த விடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆஷஸ் தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது. இந்த தொடரில் இறுதிப்பந்தை வீசிய பிராட் ஆஸ்திரேலிய வீரர் காரியின் விக்கெட்டை வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார்.

banner

Related Stories

Related Stories