விளையாட்டு

இறுதி நாளில் மாறிய ஆட்டம்.. வெற்றியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா.. வென்றும் கோப்பையை தவறவிட்ட இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

இறுதி நாளில் மாறிய ஆட்டம்..  வெற்றியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா.. வென்றும் கோப்பையை தவறவிட்ட இங்கிலாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. . இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் பரபரப்பானது. பின்னர் நடைபெற்ற நான்காவது ஆஷஸ் போட்டியில், இறுதி நாள் முழுக்க மழை பெய்த காரணத்தால் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதனால் ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் இருந்த நிலையில், மீதம் ஒரு போட்டியே மீதம் இருக்கும் நிலையில், அதை வெல்வது யார் என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 295 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன.

அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பாஸ்பால் முறையில், ஒரே நாளில் 389 ரன்களை விளாசி அதிரவைத்தது. மொத்தமாக அந்த அணி 81.5 ஓவர்களில் 395 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு நாள் ஆட்ட பணியில் 4.86 ரன்ரேட்டில் இந்த ஸ்கோரை குவித்தது.

இறுதி நாளில் மாறிய ஆட்டம்..  வெற்றியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா.. வென்றும் கோப்பையை தவறவிட்ட இங்கிலாந்து!

அதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் குவித்த நிலையில் இறுதி நாளில் அந்த அணியின் வெற்றிக்கு 249 ரன்களே தேவைப்படும் நிலையில், ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஐந்தாம் நாள் தொடங்கியதும் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துசென்ற நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

எனினும் கடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதால் இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது. அதே நேரம் 2-0 என்ற கணக்கில் இருந்து 2-2 என இங்கிலாந்து அணி சமன் செய்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories