விளையாட்டு

"IPL என்றால் ஆடுகிறார்கள், நாட்டுக்கு என்றால் Break கேட்கிறார்கள்" -இந்திய வீரர்களை விமர்சித்த கபில்தேவ்!

இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களுக்கு பிசிசிஐ அமைப்பே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சித்துள்ளார்.

"IPL என்றால் ஆடுகிறார்கள், நாட்டுக்கு என்றால் Break கேட்கிறார்கள்" -இந்திய வீரர்களை விமர்சித்த கபில்தேவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பும்ரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

"IPL என்றால் ஆடுகிறார்கள், நாட்டுக்கு என்றால் Break கேட்கிறார்கள்" -இந்திய வீரர்களை விமர்சித்த கபில்தேவ்!

இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களுக்கு பிசிசிஐ அமைப்பே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்திய வீரர்கள் அடிக்கடி காயமடைகிறார்கள். பும்ராதன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி அணிக்கு எந்த பயனும் இல்லை.

ரிஷப் பண்ட் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். ஆனால் அவரின் காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட் சற்றே பின்னடைவு கண்டுள்ளது. இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். வீரர்கள் கொஞ்சம் காயமடைந்தால் ஐபிஎல்-லில் ஆடுகிறார்கள். ஆனால் நாட்டுக்காக ஆடும்போது பிரேக் கேட்கிறார்கள். வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் பிசிசிஐ கோட்டை விட்டுள்ளது" என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories