விளையாட்டு

இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி,, ஆனால், அதை விட மிகப்பெரிய கெட்ட செய்தி.. BCCI அறிவித்தது என்ன ?

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர்பாக BCCI முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி,, ஆனால், அதை விட மிகப்பெரிய கெட்ட செய்தி.. BCCI அறிவித்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது.

அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மைதானத்தில் வெளியில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை உள்ள நிலையில், நிலையில், போட்டிகளின்போது ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரப்படும் என்று கூறி பிசிசிஐ ரசிகர்களுக்கு சிறிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி,, ஆனால், அதை விட மிகப்பெரிய கெட்ட செய்தி.. BCCI அறிவித்தது என்ன ?

அதே நேரம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் கட்டாயமாக கவுன்ட்டர் டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றும், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்ரசிகர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்து அனுமதி சீட்டை நேரில் தான் வந்து பெற வேண்டும் என்று பெரிய குண்டை தூக்கி வீசியுள்ளது பிசிசிஐ.

இதன் காரணமாக போட்டியை காண முன்பதிவு செய்த பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் போட்டி தொடங்கும் பல மணி நேரம் அல்லது சில நாட்கள் முன்னரே போட்டி நடக்கும் இடத்துக்கு வந்து அத்தனை பெரும் கூட்டத்தின் நடுவே கவுண்டரில் டிக்கெட் பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் இந்த அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories