விளையாட்டு

"இனி ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது" -வீரர்களுக்கு கடிவாளம் போட்ட BCCI !

'முன்பே தீர்மானிக்கப்பட்ட ஓய்வு' அறிவிக்கும் போக்கைத் தடுக்கும் வகையில், வீரர்களுக்கான புதிய பாலிசியை விரைவில் உருவாக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

"இனி ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது" -வீரர்களுக்கு கடிவாளம் போட்ட BCCI !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

"இனி ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது" -வீரர்களுக்கு கடிவாளம் போட்ட BCCI !

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், அமெரிக்க கிரிக்கெட் சங்கமும் தங்கள் நாட்டிலும் கிரிக்கெட் லீக்கினைத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் தொடர்களில் பிற நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றாலும் அந்த நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.

இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் மட்டுமே பிற லீக் போட்டிகளில் பங்கேற்றுவருகின்றனர். இதற்காக வீரர்கள் திடீரென ஓய்வை அறிவிப்பதும் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையை முடிவுக்கு கொண்டுவர பிசிசிஐ அமைப்பு அதிரடி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.

"இனி ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது" -வீரர்களுக்கு கடிவாளம் போட்ட BCCI !

அதன்படி, 'முன்பே தீர்மானிக்கப்பட்ட ஓய்வு' அறிவிக்கும் போக்கைத் தடுக்கும் வகையில், வீரர்களுக்கான புதிய பாலிசியை விரைவில் உருவாக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி கூலிங் ஆஃப் பீரியட் என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவதற்கு முன் கூலிங் ஆஃப் பீரியட் காலத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னரே அந்த வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவர். இந்த முடிவு பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories