விளையாட்டு

கிரிக்கெட்டின் கௌரவத்தை சிதைத்த இங்கிலாந்து ரசிகர்கள்.. ஆஸ். வீரர்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

கிரிக்கெட்டின் கௌரவத்தை சிதைத்த இங்கிலாந்து ரசிகர்கள்..  ஆஸ். வீரர்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-வது இன்னிங்சின் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்ரீன் பந்து வீசினார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் விட்ட நிலையில்,பந்து கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது, உடனே ஓவர் முடிந்துவிட்டதாக கருதிய பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீச ரன் அவுட்க்கு அப்பீல் செய்யப்பட்டது.

கிரிக்கெட்டின் கௌரவத்தை சிதைத்த இங்கிலாந்து ரசிகர்கள்..  ஆஸ். வீரர்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்ற நிலையில், ஐசிசி விதிமுறையின்படி மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார். இந்த விக்கெட் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என மைதானத்திலேயே கூச்சலிட்டனர். அதோடு இங்கிலாந்து ஊடகங்களும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி மீது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் தாயாரை இங்கிலாந்து ரசிகர்கள் தகாத வார்த்தைகளை கூறி மைதானத்தை விட்டே வெளியேற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. போட்டியில் பேர்ஸ்ட்டோவின் விக்கெட் காரணமாக மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் ஆவேசமடைந்த அங்கு இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளனர்.

கிரிக்கெட்டின் கௌரவத்தை சிதைத்த இங்கிலாந்து ரசிகர்கள்..  ஆஸ். வீரர்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

அப்போது அங்கு ஸ்டீவ் ஸ்மித்தின் தாயார் இருந்த நிலையில், அவரையும் ஆபாச வார்த்தைகளால் இங்கிலாந்து ரசிகர்கள் விமர்சித்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தின் தாயார் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளார். மேலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரின் 11 வயது மகளிடமும் இங்கிலாந்து ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்டதாக தி ஆஸ்திரேலியன் பத்திரிகை கூறியுள்ளது.

இதன் காரணமாக மூன்றாவது ஆஷஸ் போட்டியில் தங்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தவேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக தி ஆஸ்திரேலியன் பத்திரிகை கூறியுள்ளார். இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories