விளையாட்டு

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வராவிட்டால் என்ன செய்ய ? -அதிரடி திட்டம் தீட்டிய ICC அமைப்பு !

உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் வராவிட்டால் அந்த அணிக்கு பதிலாக வேறு அணியை ஆடவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வராவிட்டால் என்ன செய்ய ? -அதிரடி திட்டம் தீட்டிய ICC அமைப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வராவிட்டால் என்ன செய்ய ? -அதிரடி திட்டம் தீட்டிய ICC அமைப்பு !

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வராவிட்டால் என்ன செய்ய ? -அதிரடி திட்டம் தீட்டிய ICC அமைப்பு !

இந்த நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் வராவிட்டால் அந்த அணிக்கு பதிலாக வேறு அணியை ஆடவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்திகளில், உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்காவிட்டால், பாகிஸ்தானுக்கு பதில் தகுதி சுற்றில் மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு அந்த வாய்ப்பை வழங்க ஐசிசி திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனை பாகிஸ்தான் வாரியத்திடம் தெரியப்படுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சத்தின் காரணமாக நிச்சயமாக பாகிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories