விளையாட்டு

பிரபல இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்.. பொய் சொல்லி வசமாக சிக்கிய நடிகை.. நடந்தது என்ன ?

பிரபல இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்.. பொய் சொல்லி வசமாக சிக்கிய நடிகை.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது நண்பரான ஆஷிஷ் யாதவ் மற்றும் சிலருடன் மும்பையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இரவு உணவருந்த சென்ரோலர். அப்போது பிரித்வி ஷாவை அடையாளம் கண்டுகொண்ட கும்பல் ஒன்று செல்ஃபி எடுக்கவேண்டும் என பிரித்வி ஷாவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு பிரித்வி ஷாவும் ஒப்புக்கொண்டு சில செல்ஃபிகளை எடுத்துக்கொண்ட நிலையில், அந்த கும்பல் மேலும் சில செல்ஃபி எடுக்கவேண்டும் என கூறியுள்ளது. ஆனால், இதற்க்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், ஹோட்டலின் மேலாளார் உடனடியாக விரைந்து வந்து இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த கும்பலை ஹோட்டலை விட்டு வெளியே அனுப்பியுள்ளது. பின்னர் பிரித்வி ஷா தனது நண்பர்களோடு உணவருந்தி வெளியே வரும்போது வெளியே காத்திருந்த கும்பல் மீண்டும் பிரித்வி ஷாவோடு தகராறு செய்துள்ளது.

மேலும், பிரித்வி ஷாவின் கார் கண்ணாடியை தான் வைத்திருந்த பேஸ் பால் மட்டையால் தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா வேறு காரில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனாலும் விடாத அந்த கும்பல் அவர்களை துரத்திச்சென்று மீண்டும் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதோடு பிரித்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் யாதவிடம் இந்த விவகாரத்தை முடிக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. அதன்பின்னர் ஆஷிஷ் யாதவ் இதுதொடர்பாக காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி அந்த கும்பலையை சேர்ந்த பெண் உட்பட 8 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

பிரபல இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்.. பொய் சொல்லி வசமாக சிக்கிய நடிகை.. நடந்தது என்ன ?

அதன்பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யபட்ட ஸ்வப்னா கில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். மேலும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதற்கு ஆதாரமாக சம்பவம் நடைபெற்ற இடங்களில் கிடைத்த சிசிடிவி மற்றும், வீடியோ காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஹோட்டல் மேலாளர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களில் வாக்குமூலமும் அதில் இணைக்கப்பட்டது. ஸ்வப்னா கில்லின் நண்பர் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி கில் தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories