விளையாட்டு

”கிரிக்கெட்டில் கூட குஜராத்துக்குதான் முன்னுரிமை,, இதில் கூட அரசியலா ?” -பஞ்சாப் அமைச்சர் காட்டம் !

பஞ்சாபிற்கு ஒரு போட்டி கூட ஒதுக்காமல் இதிலிருந்தே அரசியல் செய்கிறார்கள் என பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

”கிரிக்கெட்டில் கூட குஜராத்துக்குதான் முன்னுரிமை,, இதில் கூட அரசியலா ?” -பஞ்சாப்  அமைச்சர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.

”கிரிக்கெட்டில் கூட குஜராத்துக்குதான் முன்னுரிமை,, இதில் கூட அரசியலா ?” -பஞ்சாப்  அமைச்சர் காட்டம் !

இதுமட்டுமின்றி ஐபிஎல் போன்ற தொடர்களின் முக்கிய போட்டிகளும், நரேந்திர மோடி மைதானத்தில்தான் நடத்தப்பட்டது. இப்படி ஒரு மைதானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருக்கும் காரணத்தால்தான் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பஞ்சாபிற்கு ஒரு போட்டி கூட ஒதுக்காமல் இதிலிருந்தே அரசியல் செய்கிறார்கள் என பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் குர்மீத் சிங், ” உலகக்கோப்பையின் முதல், இறுதிபோட்டிகள் மட்டுமன்றி, இந்தியா VS பாகிஸ்தான் போட்டி என 3 முக்கியப் போட்டிகள் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன;. ஆனால் பஞ்சாபிற்கு ஒரு போட்டி கூட ஒதுக்கப்படவில்லை; இதிலிருந்தே கிரிக்கெட்டிலும் அரசியல் செய்கிறார்கள் என தெரிகிறது” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories