விளையாட்டு

பிரபலமான விளையாட்டு அணிகள்.. ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த CSK !

கடந்த மே மாதத்தில் உலகளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான விளையாட்டு அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

பிரபலமான விளையாட்டு அணிகள்.. ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த CSK !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையான கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் உலகளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான விளையாட்டு அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது குறித்து விளையாட்டுகளை தொகுத்து வழங்கும் தளமான இன்சைட் ஸ்போர்ட்ஸ் தளம் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் பிரபலமான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளை பின்னுக்கு தள்ளி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் இரண்டாம் இடத்தை ரியல் மாட்ரிட் அணியும், மூன்றாம் இடத்தை பார்சிலோனா அணியும், நான்காம் இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐந்தாம் இடத்தை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிடித்துள்ளன. இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories