விளையாட்டு

கால்பந்து ஜாம்பவானுக்கு மேலும் ஒரு மகுடம்.. சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை வென்றார் மெஸ்ஸி !

இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் உலக விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜாம்பவானுக்கு மேலும் ஒரு மகுடம்.. சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை வென்றார் மெஸ்ஸி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

கால்பந்து ஜாம்பவானுக்கு மேலும் ஒரு மகுடம்.. சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை வென்றார் மெஸ்ஸி !

இவர் கடந்த மோன்ட்பில்லர் அணிக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் டாப் 5 ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் அதிக கோல் அடித்த வீரராக மாறினார். அவர் தற்போதுவரை 697 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மற்றொரு மகுடமாக இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் உலக விளையாட்டு விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் அணிகள் ஆகியவற்றை தேர்வு செய்து Laureus World Sports விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலககோப்பையில் தங்கபந்து விருது வென்றவருமான மெஸ்ஸிக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜாம்பவானுக்கு மேலும் ஒரு மகுடம்.. சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதை வென்றார் மெஸ்ஸி !

இது குறித்து பேசிய மெஸ்ஸி, " இந்த விருதை இரண்டாம் முறையாக பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த நேரத்தில் நான் என்னுடைய அனைத்து அணி வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.வழியில் பல தடைகள் இருந்தன, ஆனால் நான் எப்போதும் என் மக்களின் ஆதரவுடன் என்னை மேம்படுத்த முயற்சித்தேன். எனது கனவையும் ஒரு முழு நாட்டின் கனவையும் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இந்த விருது அர்ஜென்டினா அணிக்கு அர்ப்பணிக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories