விளையாட்டு

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணாவின் மனைவியின் காரை விடாமல் பின் துரத்தி சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் நாம் தினமும் படிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. பெண்களை குறிவைத்து சில ஆண்கள் இப்படி செய்வது உண்டு. ஆனால் சில இளைஞர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் போதையில் வயதான பெண்களிடமும், மூதாட்டியிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

குறிப்பாக இதுபோன்ற செய்தி அதிகமாக தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. நிர்பயா வழக்கு உட்பட பல முக்கிய பாலியல் வழக்குகள் டெல்லியில் தான் நடந்துள்ளது. மேலும் அண்மையில் டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டே சுய இன்பம் செய்துள்ள நிகழ்வு குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி கண்டங்களை எழுப்பியது.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

இந்த சூழலில் மற்றொரு நிகழ்வாக பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியின் காரை 2 இளைஞர்கள் பைக்கில் பின் தொடர்ந்து துரத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக இருப்பவர் நிதிஷ் ராணா. பிரபல கிரிக்கெட் வீரரான இவர் தனது மனைவி சாச்சி மார்வாவுடன் வசித்து வருகிறார்.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !
KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

டெல்லியில் வசித்து வரும் ராணாவின் மனைவி சாச்சி மார்வா, சம்பவத்தன்று கீர்த்தி நகர்ப் பகுதியில் தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த 2 இளைஞர்கள் இவரது காரை பின் தொடந்துள்ளனர். அவர்கள் பின் தொடர்வதை அறிந்த சாச்சி, தனது காரை வேகமாக ஒட்டும்படி கூறியுள்ளார். அப்படி இருந்தும் விடாமல் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

அப்போது திடீரென கார் நின்றபோது, அந்த இளைஞர்கள் தங்கள் வாகனத்தை கொண்டு அந்த காரில் மோதியுள்ளனர். இதை முழுவதும் அவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் சாச்சி அங்கிருந்து பத்திரமாக சென்றுவிட்டார். இதையடுத்து இதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டு, கண்டனம் தெரிவித்தார்.

KKR கேப்டன் ராணாவின் மனைவியை விடாமல் துரத்தி சென்ற 2 இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

மேலும் இதுகுறித்து முதலில் போலீசில் புகார் செய்தும் அவர்கள் வழக்குபதிய மறுத்ததாக சாச்சி குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த இளைஞர்களை கண்டறிந்தனர். அப்போது அது பாண்டவ் நகரை சேர்ந்த சைத்தன்யா சிவம் (18), படேல் நகரை சேர்ந்த விவேக் (18) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணாவின் மனைவியின் காரை விடாமல் பின் துரத்தி சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories