விளையாட்டு

"அப்போது எழுந்த சத்தத்தை போல என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" - தோனி குறித்து பிரமித்த மார்க் வுட்!

தனது பந்தில் தோனி அடித்த அந்த சிக்ஸரின்போது எழுந்த சத்தத்தை போல ஒரு சத்தத்தை என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை என்று மார்க் வுட் கூறியுள்ளார்.

"அப்போது எழுந்த சத்தத்தை போல என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" - தோனி குறித்து பிரமித்த மார்க் வுட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

"அப்போது எழுந்த சத்தத்தை போல என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" - தோனி குறித்து பிரமித்த மார்க் வுட்!

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 79 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி 100 ரன்கள் ஜோடி சேர்ந்து அடித்த பின்னர் ருத்துராஜ் 57, கான்வே 47 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் அதிரடியாக ஆட சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் தோனி பிரமாண்டமான இரண்டு சிக்ஸர் விலாச 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

"அப்போது எழுந்த சத்தத்தை போல என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" - தோனி குறித்து பிரமித்த மார்க் வுட்!

பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணியை விட அதிக ரன்கள் குவித்தது. ஆனால் மொயின் அலி பந்துவீச்சில் மேயர்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணிக்காக ஆடிய மார்க் வுட் தனது பந்தில் தோனி அடித்த அந்த சிக்ஸரின்போது எழுந்த சத்தத்தை போல ஒரு சத்தத்தை என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை என்று கூறியுள்ளார். போட்டி முடிந்து 2 நாட்களுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், "நானும் கே எல் ராகுலும் எப்படி தோனியை ஆட்டம் இழக்க வைப்பது என பேசிக்கொண்டு இருந்தோம். என் மனதில் நான் தோனியை எப்படி நெருக்கடிக்கு ஆளாக்கி அவரை ஆட்டமிழக்க வைப்பது என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன்.

"அப்போது எழுந்த சத்தத்தை போல என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" - தோனி குறித்து பிரமித்த மார்க் வுட்!

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பந்துகளில் 12 ரன்கள் சென்று விட்டது. அதுவும் தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். தோனி பேட்டிங் வந்தபோது அவ்வளவு ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்த போது எழுந்த சத்தம் என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories