விளையாட்டு

"வேறு கேப்டனின் கீழ் விளையாட நேரிடும்" -தோனியின் எச்சரிக்கையின் பின் இருக்கும் புதிய விதிமுறை என்ன ?

நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், வீரர்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என csk கேப்டன் தோனி கூறியுள்ளார்.

"வேறு கேப்டனின் கீழ் விளையாட நேரிடும்" -தோனியின் எச்சரிக்கையின் பின் இருக்கும் புதிய விதிமுறை  என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

"வேறு கேப்டனின் கீழ் விளையாட நேரிடும்" -தோனியின் எச்சரிக்கையின் பின் இருக்கும் புதிய விதிமுறை  என்ன ?

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 79 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி 100 ரன்கள் ஜோடி சேர்ந்து அடித்த பின்னர் ருத்துராஜ் 57, கான்வே 47 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் அதிரடியாக ஆட சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் தோனி பிரமாண்டமான இரண்டு சிக்ஸர் விலாச 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

"வேறு கேப்டனின் கீழ் விளையாட நேரிடும்" -தோனியின் எச்சரிக்கையின் பின் இருக்கும் புதிய விதிமுறை  என்ன ?

பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணியை விட அதிக ரன்கள் குவித்தது. ஆனால் மொயின் அலி பந்துவீச்சில் மேயர்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் 13 Wide , 3 NO -Ball-களை வீசியிருந்தனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்னை அணியால் பந்துவீசி முடிக்கமுடியவில்லை. இதனால் கடைசி ஓவரில் சென்னை அணியின் பீல்டர்களில் ஒருவர் 30 யார்டு வட்டத்துக்குள் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

"வேறு கேப்டனின் கீழ் விளையாட நேரிடும்" -தோனியின் எச்சரிக்கையின் பின் இருக்கும் புதிய விதிமுறை  என்ன ?

இந்த போட்டி முடிந்தபின்னர் பேசிய csk அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, "சென்னை அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் இன்னும் முன்னேற வேண்டும். பிட்ச் மற்றும், சூழலுக்கும் ஏற்றாற்போல் பந்துவீச வேண்டும். அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால் மற்றும் ஓய்டு பந்துகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், வீரர்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும்" என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Slow Over Rate விதிகளின் படி குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்காத அணியின் கேப்டனுக்கு முதல்முறை ரூ.12 லட்சம் அபராதமும். 2-வது முறை ரூ.24 லட்சம் அபராதமும். 3-வது முறை ரூ.30 லட்சம் அபராதமும், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும். இதனைக் குறிப்பிட்டே தோனி இதைப்போன்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories