விளையாட்டு

சேப்பாக்கத்தில் முதல் வெற்றி.. CSK குறித்து தமிழில் PUNCH DIALOGUE விட்ட ஹர்பஜன் சிங் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

சேப்பாக்கத்தில் முதல் வெற்றி.. CSK குறித்து தமிழில் PUNCH DIALOGUE விட்ட ஹர்பஜன் சிங் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

சேப்பாக்கத்தில் முதல் வெற்றி.. CSK குறித்து தமிழில் PUNCH DIALOGUE விட்ட ஹர்பஜன் சிங் !

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 79 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி 100 ரன்கள் ஜோடி சேர்ந்து அடித்த பின்னர் ருத்துராஜ் 57, கான்வே 47 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் அதிரடியாக ஆட சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் தோனி பிரமாண்டமான இரண்டு சிக்ஸர் விலாச 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணியை விட அதிக ரன்கள் குவித்தது. ஆனால் மொயின் அலி பந்துவீச்சில் மேயர்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “"சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும், விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல எம்.எஸ் தோனி இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சிஎஸ்கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories