விளையாட்டு

"இவர் இப்படி ஆவார் என முன்பு நான் நினைக்கவேயில்லை" -விராட் கோலி குறித்து வீரேந்திர சேவாக் கூறியது என்ன ?

விராட் கோலியை இன்று ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு 70- 75 சதங்கள் அல்லது 25000+ ரன்கள் அடிப்பார் என்று நினைக்கவில்லை என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

"இவர் இப்படி ஆவார் என முன்பு நான் நினைக்கவேயில்லை" -விராட் கோலி குறித்து வீரேந்திர சேவாக் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் மீது விழுந்திருக்கிறது. 34 வயதான விராட் கோலி சமீபமாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து சதங்கள் அடித்து மிரட்டினார் அவர். அதனால், இலங்கை அணியை வைட் வாஷ் செய்தது இந்திய அணி.

பல ஆண்டுகளாக இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இழந்து தவித்து வந்தார். நிறைய அரைசதங்கள் அடித்தாலும் அதனை சதமாக மாற்றுவதில் தொடர்ந்து சோபித்த வந்தார். ஆனால், இந்த ஆண்டு விராட் கோலிக்கு மிகவும் ராசியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் டெஸ்ட்,ஒருநாள் போட்டி, டி20 போட்டி என மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

"இவர் இப்படி ஆவார் என முன்பு நான் நினைக்கவேயில்லை" -விராட் கோலி குறித்து வீரேந்திர சேவாக் கூறியது என்ன ?

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங்கை தங்கப்போவது யார் என்று முன்னர் கேள்வி எழுந்த நிலையில், தற்போது விராட் கோலிக்கு பின்னர் யார் என்று கேட்கவைக்கும் நிலைக்கு தற்போது விராட் கோலி உயர்ந்துள்ளார். அணியில் வாய்ப்பு கிடைத்து தொடக்கத்தில் தடுமாறி வந்த விராட் கோலியை யார் என்று 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இலங்கைக்கு அணிக்கு எதிராக நடந்த முத்தரப்பு காமன்வெல்த் போட்டி உலகுக்கு காட்டியது.

அந்த போட்டியில் 321 ரன்களை 40 ஓவருக்குள் சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலையில், அபாரமாக ஆடிய விராட் கோலி 16 பவுண்டரி 2 சிக்சருடன் 133* (86) ரன்கள் விளாசி 36.4 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற செய்தார். அதிலும் உலகின் அபாயகரமான பந்துவீச்சாளராக கருதப்பட்ட மலிங்கா ஓவரை நயப்புடைத்ததை யாராலும் மறக்கமுடியாது.

"இவர் இப்படி ஆவார் என முன்பு நான் நினைக்கவேயில்லை" -விராட் கோலி குறித்து வீரேந்திர சேவாக் கூறியது என்ன ?

இந்த நிலையில், அந்த விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலி இன்று எட்டியுள்ள இந்த உச்சத்தை அடைவார் என்று ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. குறிப்பாக காமன்வெல்த் தொடரில் மலிங்காவை பவுண்டரிகளாக பறக்க விட்ட போதும் நான் நினைக்கவில்லை. இன்று ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு 70- 75 சதங்கள் அல்லது 25000+ ரன்கள் அடிப்பார் என்றும் நினைக்கவில்லை.

"இவர் இப்படி ஆவார் என முன்பு நான் நினைக்கவேயில்லை" -விராட் கோலி குறித்து வீரேந்திர சேவாக் கூறியது என்ன ?

உங்களிடம் திறமை இருந்தும் அதை செயல்பாடுகளாக மாற்றுவது கடினம் என்பதால் அவர் மீது நான் சந்தேகமாகவே இருந்தேன். ஆனால் இன்று அவர் நான் உட்பட அனைவரையும் அவ்வாறு நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டார். விராட் கோலி இன்று இந்தளவுக்கு தொட்டுள்ள உச்சங்கள் நம்ப முடியாதது. குறிப்பாக அதிக உடற்பயிற்சி செய்தால் பெரிய ரன்கள் எடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்தினார். அவரது காலத்தில் நிறைய வீரர்கள் வந்து போனார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே இந்திய அணியில் தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories