விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான்களுடன் வைக்கப்படவுள்ள மெஸ்ஸியின் சிலை.. கௌரவப்படுத்திய தென்னமெரிக்க கால்பந்து கழகம் !

அர்ஜென்டினா அணிக்கு உலகக்கோப்பை வென்றுகொடுத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை தென்னமெரிக்க கால்பந்து கழகம் கௌரவப்படுத்தியுள்ளது.

கால்பந்து  ஜாம்பவான்களுடன் வைக்கப்படவுள்ள மெஸ்ஸியின் சிலை.. கௌரவப்படுத்திய தென்னமெரிக்க கால்பந்து கழகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

கால்பந்து  ஜாம்பவான்களுடன் வைக்கப்படவுள்ள மெஸ்ஸியின் சிலை.. கௌரவப்படுத்திய தென்னமெரிக்க கால்பந்து கழகம் !

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

கால்பந்து  ஜாம்பவான்களுடன் வைக்கப்படவுள்ள மெஸ்ஸியின் சிலை.. கௌரவப்படுத்திய தென்னமெரிக்க கால்பந்து கழகம் !

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்கு உலகக்கோப்பை வென்றுகொடுத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை தென்னமெரிக்க கால்பந்து கழகம் கௌரவப்படுத்தியுள்ளது. உலகக்கோப்பையை ஏந்திய அவரின் முழு உருவசிலையை உருவாக்கி அதை மெஸ்ஸிக்கு வழங்கியுள்ளது. அதுதவிர இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories