விளையாட்டு

விராட் கோலியின் அந்த வார்த்தைக்கு பின்னர் புத்துயிர் பெற்ற பெங்களூரு அணி.. தொடர் வெற்றியை ஈட்டுமா ?

புத்துணர்ச்சியூட்டும் விராட் கோலியின் உரைக்கு பின்னர் பெங்களூரு அணி மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

விராட் கோலியின் அந்த வார்த்தைக்கு பின்னர் புத்துயிர் பெற்ற பெங்களூரு அணி.. தொடர் வெற்றியை ஈட்டுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

விராட் கோலியின் அந்த வார்த்தைக்கு பின்னர் புத்துயிர் பெற்ற பெங்களூரு அணி.. தொடர் வெற்றியை ஈட்டுமா ?

அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வருகின்றன.

இந்த தொடர் தற்போது முதல் பாதியை கடந்துள்ள நிலையில், லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மும்பை அணி 5 போட்டிகளில் 5 வெற்றிகளோடு முதல் இடத்தில் இருக்கும் நிலையில் டெல்லி அணி 4 வெற்றிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி கிட்டத்தட்ட தொடரில் இருந்தே வெளியேறும் பரிதாப நிலையில் இருந்தது.

விராட் கோலியின் அந்த வார்த்தைக்கு பின்னர் புத்துயிர் பெற்ற பெங்களூரு அணி.. தொடர் வெற்றியை ஈட்டுமா ?

இந்த நிலையில் பெங்களூரு மகளிர் அணி வீராங்கனைகளை பெங்களூரு ஆண்கள் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய அவர் உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறினார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறேன். ஆனால் இன்னும் கோப்பையை நான் வெல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்வமாக இருந்து வருகிறேன். வென்றால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்க மாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் தீவிரமாக விளையாடுவதால்தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் நமக்கு இருக்கிறார்கள்.

விராட் கோலியின் அந்த வார்த்தைக்கு பின்னர் புத்துயிர் பெற்ற பெங்களூரு அணி.. தொடர் வெற்றியை ஈட்டுமா ?

ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்வோம் என்கிற உத்தரவாதத்தை நாம் ரசிகர்களுக்குத் தர முடியாது. ஆனால் 110 சதவீதம் உழைப்பைச் செலுத்துவோம் என்கிற உத்தரவாதத்தைத் தர முடியும். இதுதான் உண்மையான சோதனை. ஆனால் இதுதான், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள உதவும் பாடம். ஆகையால், எப்போதும் முகத்தை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

இந்த புத்துணர்ச்சியூட்டும் விராட் கோலியின் உரைக்கு பின்னர் பெங்களூரு அணி அடுத்ததாக தான் சந்தித்த உ.பி அணியுடனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. .

banner

Related Stories

Related Stories