விளையாட்டு

”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !

ஒவ்வொரு முறை திணறும்போதும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று அஸ்வின் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார் என அவரை ஜடேஜா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !

பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி175/2 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துகொள்ளப்பட்டது.

”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !

இதனால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றி புதிய வரலாறும் படைத்துள்ளது. இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள் விளாசிய அஸ்வின் , 135 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆகியோர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் பேசிய ஜடேஜா ” அஸ்வினுடன் இத்தனை ஆண்டு காலம் இணைந்து பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு முறை நான் திணறும்போதும் இக்கட்டான சூழலில் இருக்கும் போதும் எப்படி பீல்டிங் நிறுத்த வேண்டும், எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்.

”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !

அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை மட்டுமல்ல, அதையும் தாண்டியது. கிரிக்கெட் தாண்டி பலவற்றை பேசுவார். எங்களுக்கு பெயரே தெரியாத அணியை பற்றி எல்லாம் பேசுவார். உலகில் நடந்த அனைத்து கிரிக்கெட் சீரிஸ் பற்றியும் இவருக்கு தெரியும். கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

banner

Related Stories

Related Stories