விளையாட்டு

U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!

U19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் இளம் இந்திய அணி நுழைந்துள்ளது.

U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி..
துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (பிப்ரவரி 04) நடைபெற்ற  அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (பிப்ரவரி 06) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.

16 அணிகள் மோதும் U19 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் லீக் சுற்றுகளில் இருந்து ஆடிய 12 அணிகளில் இருந்து 6 அணிகள் சூப்பர் 6 பிரிவுகளுக்கு முன்னேறின.

U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி..
துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!

சூப்பர் 6 பிரிவில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து நேற்று நடந்த 2வது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியின் பைசல் ஷினோசடா 110 ரன்களும், அசிசுல்லா மியாகில் 101 ரன்களும் எடுத்தனர்.

U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி..
துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!

பின்னர் 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 15 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடினார். கேப்டன் ஆயுஷ் மாத்ரே நிதானமாக 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 62 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 68 ரன்களும் எடுத்தனர். 41.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 311 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10வது முறையாக U19 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இளம் இந்திய அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories