விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா.. நியூஸிலாந்து அணியால் அடித்த யோகம் !

இலங்கை அணியின் தோல்வி காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்காக காத்திருக்காமல் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்தியா.. நியூஸிலாந்து அணியால் அடித்த யோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்தியா.. நியூஸிலாந்து அணியால் அடித்த யோகம் !

முன்னதாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவேண்டும் என்றால் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை 4-0, 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் வெல்லவேண்டும் என்ற நிலை இருந்தது. அப்படி வென்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

அதன்படி முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கான தனது இடத்தை இந்திய அணி அதிகரித்தது. ஆனால், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றதும் இந்த நிலை அப்படியே மாறியது. நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்ததும் இந்திய முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்தியா.. நியூஸிலாந்து அணியால் அடித்த யோகம் !

இதனால் இந்திய அணி இலங்கை நியூஸிலாந்து அணிகள் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலையி உருவானது. இலங்கை அணி நியூஸிலாந்தை 2-0 என்ற கணக்கில் வென்று இந்தியா ஆஸ்திரேலியா மோதும் தொடர் 2-1 என்ற நிலை வந்தால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் சூழல் நிலவியது.

இதனால் இலங்கை நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி அதிக கவனம் பெற்றது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி முன்னிலையில் இருந்த நிலையில், டேரில் மிச்சலின் சதம் காரணமாக நியூஸிலாந்து அணி போட்டிக்குள் மீண்டுவந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்சிலும் தடுமாறிய நியூஸிலாந்து அணியை டேரில் மிச்சல் கேன் வில்லியம்சன் கூட்டணி மீட்டு வெற்றியை நோக்கி முன்னேறியது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்தியா.. நியூஸிலாந்து அணியால் அடித்த யோகம் !

5-ம் நாள் முடிவில் இறுதிப்பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப்பந்தில் பைஸ் மூலம் கிடைத்த ரன் காரணமாக நியூஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கை அணியின் இந்த தோல்வி காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்காக காத்திருக்காமல் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாகமுன்னேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories