விளையாட்டு

அலெக்ஸ் கேரி முதல் குக்னிமோன் வரை.. ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி அஸ்வின் சாதனை !

இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய அனைத்து வீரர்களையும் (15 வீரர்களை ) வீழ்த்திய பந்துவீச்சாளர் எந்த சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

அலெக்ஸ் கேரி முதல் குக்னிமோன் வரை.. ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி அஸ்வின் சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

அலெக்ஸ் கேரி முதல் குக்னிமோன் வரை.. ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி அஸ்வின் சாதனை !

பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கவாஜா 180 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அலெக்ஸ் கேரி முதல் குக்னிமோன் வரை.. ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி அஸ்வின் சாதனை !

இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரராக குக்னிமோன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

இறுதி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குக்னிமோனின் விக்கெட்டை இந்திய வீரர் அஸ்வின் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய அனைத்து வீரர்களையும் (15 வீரர்களை ) வீழ்த்திய பந்துவீச்சாளர் எந்த சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது மற்றொரு சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories