விளையாட்டு

”தோனிக்காக சேப்பாக்கம் எப்படி மாற போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் “ -மேத்யூ ஹெய்டன் பேச்சு !

தோனி நிச்சயமாக அவரின் கடைசி ஐபிஎல் தொடரை அவரின் பாணியிலேயே சிறப்பாக முடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.

”தோனிக்காக சேப்பாக்கம் எப்படி மாற போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் “ -மேத்யூ ஹெய்டன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

”தோனிக்காக சேப்பாக்கம் எப்படி மாற போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் “ -மேத்யூ ஹெய்டன் பேச்சு !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். அதிலும் இந்த ஆண்டு தோனி சென்னை அணிக்காக தனது இறுதி போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மஞ்சள் சீருடையில் களமிறங்குவதை காண ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர்.

”தோனிக்காக சேப்பாக்கம் எப்படி மாற போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் “ -மேத்யூ ஹெய்டன் பேச்சு !

இந்த நிலையில், தோனி நிச்சயமாக அவரின் கடைசி ஐபிஎல் தொடரை அவரின் பாணியிலேயே சிறப்பாக முடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”

சென்னை அணிக்கென்று தனி வழி உள்ளது. தோனி ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சி கொடுத்து அணியை வழிநடத்திப் பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பழைய வீரர்கள் ரீட்டெய்ன் செய்யப்பட்டாலும், முழுமையாகவே ஒரு புதிய அணியாக இது உருவெடுத்து வருகிறது.

”தோனிக்காக சேப்பாக்கம் எப்படி மாற போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் “ -மேத்யூ ஹெய்டன் பேச்சு !

தோனியைப் பொறுத்தவரை, அவரின் கடைசி ஐபிஎல் தொடரை அவரின் பாணியிலேயே சிறப்பாக முடிப்பார். ரசிகர்களும் அதையே விரும்புவார்கள். இதனால் இந்த வருட ஐபிஎல் தொடர் பிற வருடங்களைவிடச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு . 'யெல்லோ ஆர்மி' சேப்பாக்கம் மைதானத்தை முழுவதுமாக நிரப்பப்போகிறது.

எப்போதும் போல சொந்த மைதானத்தில் வீழ்த்த முடியாத அணியாக சென்னை அணி இருக்கும். சேப்பாக்கம் சென்னை அணியின் கோட்டை, அங்கு தனது ரசிகர்கள் மத்தியில் விடைபெறவேண்டும் என்றுதான் தோனி ஐபிஎல்-லில் இருந்து விலகாமலே இருந்தார். இதுதான் தோனியின் கடைசி தொடராக இருக்கும், அதனால் இது நிச்சயம் யாராலும் மறக்கமுடியாத தொடராக இருக்கும். அதற்காகவே நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரப்போகிறது” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories