விளையாட்டு

PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !

PSG அணி ஊதியத்தை குறைத்துக் கொள்ள மெஸ்ஸியை கட்டாயப்படுத்துவதாகவும், அந்த அணியின் புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மிகசிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார்.

இது தவிர சில நாட்களுக்கு முன்னர் அவர் ஃபிபா அமைப்பின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. இது தவிர பாலன் டி ஓர் போன்ற உலகின் முக்கிய விருதுகள் அனைத்தையும் அவர் வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவில் இணைந்து அந்த அணி பல்வேறு கோப்பைகளை குவிக்க காரணமாக இருந்தார்.

PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !

கோபா டெல் ரே,லா லிகா, சாம்பியன்ஸ் கோப்பை, கிளப் உலகக்கோப்பை என பார்சிலோனா ஆடிய அத்தனை தொடரிலும் அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். பார்சிலோனா-மெஸ்ஸி என்ற பந்தம் பிரிக்கவே முடியாது என்று இருந்த நிலையில், இந்த உறவில் முறிவு ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்சிலோனா மெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட நிலையில் கண்ணீரோடு அந்த கிளப்பில் இருந்து விடைபெற்றார் மெஸ்ஸி. பின்னர் பிரான்சில் பிரபல பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) கிளப்பில் இணைந்த அவருக்கு அங்கு அனுபவம் பெரிய அளவில் சிறப்பாகயில்லை. முதலாம் ஆண்டு அங்கு திணறிய மெஸ்ஸி, இரண்டாம் ஆண்டில் இருந்து PSG கிளப்புக்கு முக்கிய ஆட்டக்காரராக மாறியுள்ளார்.

PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !

இந்த ஆண்டு அந்த அணிக்காக அதிக கோல் பங்களிப்பு செய்தவராக மெஸ்ஸி இருந்து வருகிறார். எனினும் இந்த ஆண்டோடு அவரின் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்நிலையில், மெஸ்ஸி PSG அணியில் தொடருவாரா அல்லது வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், அவர் தனது தாய் கிளப்பான பார்சிலோனாவில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், PSG அணி ஊதியத்தை குறைத்துக் கொள்ள மெஸ்ஸியை கட்டாயப்படுத்துவதாகவும், அந்த அணியின் புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !

அதே நேரம் மேசையின் மேலாளராக உள்ள அவரின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார் என்றும், விரைவில் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி இல்லாமல் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடரில் இருந்து தொடர்ந்து வெளியேறி பார்சிலோனா திணறிவரும் நிலையில், மெஸ்ஸியை பார்சிலோனா எதிர்நோக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories