விளையாட்டு

"ரன்னே அடிக்காத இந்த வீரர்களுக்கு இன்னும் எத்தனை வாய்ப்பு கொடுக்கப்படும்?" -தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !

ரன்களை அடிக்காத நட்சத்திர வீரர்களுக்கு எத்தனை காலம் இந்திய அணி வாய்ப்பும் ஆதரவும் கொடுக்கப் போகிறது என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கேள்வியெழுப்பியுள்ளார்.

"ரன்னே அடிக்காத இந்த வீரர்களுக்கு இன்னும் எத்தனை வாய்ப்பு கொடுக்கப்படும்?"  -தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.

"ரன்னே அடிக்காத இந்த வீரர்களுக்கு இன்னும் எத்தனை வாய்ப்பு கொடுக்கப்படும்?"  -தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !

மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில், ரன்களை அடிக்காத நட்சத்திர வீரர்களுக்கு எத்தனை காலம் இந்திய அணி வாய்ப்பும் ஆதரவும் கொடுக்கப் போகிறது என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியாவின் டாப் 7 பேட்ஸ்மேன்கள் போதிய அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. நமது பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அவுட்டாகி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது கடினமா என்று கேட்டால்? கடினம்தான்.

"ரன்னே அடிக்காத இந்த வீரர்களுக்கு இன்னும் எத்தனை வாய்ப்பு கொடுக்கப்படும்?"  -தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !

ஆனால் ஒரு அணியாக இந்த மாதிரியான பிட்ச்களில் விளையாட விரும்பும் அவர்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும். அது கடினமான வேலை என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கிறேன். ஆனால் அது தான் டெஸ்ட் கிரிக்கெட்.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தான் நாம் வென்றோம். மேலும் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெற்றியில் அதிக பங்காற்றியுள்ளனர். தற்போதைய நிலையில் ரன்கள் அடிக்காத நட்சத்திர வீரர்களுக்கு எத்தனை காலம் இந்திய அணி வாய்ப்பும் ஆதரவும் கொடுக்கப் போகிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories