விளையாட்டு

"என்னுடைய ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை" -அதிரடி ஆட்டம் ஆடியும் வருத்தப்படும் இந்திய வீரர் !

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக நான் மகழ்ச்சியடையவில்லை என இந்திய வீரர் ராகுல் திரிபாதி கூறியுள்ளார்.

"என்னுடைய ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை" -அதிரடி ஆட்டம் ஆடியும் வருத்தப்படும் இந்திய வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் மிகசிறந்த இந்திய வீரர் ஒருவரை அடையாளம் காட்டும். அதில் பலர் இந்திய அணிக்காக ஜொலித்துள்ளனர். கே.எல்.ராகுல், பும்ரா போன்ற தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரின் அடையாளம்தான்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் அடையாளம் காட்டிய வீரர் தான் ராகுல் திரிபாதி. ஹைதராபாத் அணிக்கு மிகவும் முக்கியமான 3-வது இடத்தில் ஆடிய அவர் பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய அணியின் முனாள் ஓப்பனர் விரேந்திர சேவாக் கூட இந்த சீசனின் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி தான் என்று அவரை பாராட்டி தள்ளியிருந்தார்.

"என்னுடைய ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை" -அதிரடி ஆட்டம் ஆடியும் வருத்தப்படும் இந்திய வீரர் !

கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காகவும் புனே அணிக்காகவுமே கூட மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணமாக ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியின் கதவுகள் திறக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமாகிய அவர் 5 போட்டிகள் மட்டுமே ஆடி 144.78 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட ராகுல் திரிபாதி தொடக்க ஓவர்களில் இந்தியா ரன்குவிக்க தடுமாறிய வேளையில் அதிரடியாக 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னாள் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சுயநலமின்றி அதிரடி ஆட்டம் ஆடினார். அவரின் இந்த அதிரடி ஆட்டத்தை சுப்மன் கில்லின் அதிரடி சதத்துக்கு மத்தியிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

"என்னுடைய ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை" -அதிரடி ஆட்டம் ஆடியும் வருத்தப்படும் இந்திய வீரர் !

இந்த நிலையில், தனது இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக நான் மகழ்ச்சியடையவில்லை என ராகுல் திரிபாதி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்பட அனைவரும் என்னுடைய வழக்கமான ஆட்டத்தையேஆட சொல்கிறார்கள். அதனால் முதல் 6 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்கள் கிடைக்கும் என்பது உறுதி. அஹமதாபாத் மைதானத்தில் இத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே விளையாடுவது பெருமைக்குரியதாக இருக்கிறது. அதேபோல இந்த தொடரை வென்றதும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories