விளையாட்டு

"இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்" -இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆருடம் !

இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன் என இந்திய முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

"இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்" -இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆருடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய , இஷான் கிஷன் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அடுத்தடுத்தும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். இறுதியில் இரட்டை சதம் விளாசி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரின் அதிரடி காரணமாக இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

"இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்" -இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆருடம் !

அதேபோல பும்ரா காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் சிறந்த டெத் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் அர்ஷ்தீப் சிங் திகழ்ந்தார்.

இந்த நிலையில் இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன் என இந்திய முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

"இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்" -இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆருடம் !

இவர்கள் குறித்து தனியார் ஓடிடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனில் கும்ப்ளே, "அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங்கை அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன். பேட்டர்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்தி வருகிறார் இஷான் கிஷன். இரட்டைச் சதமெடுத்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என நம்பிக்கையாக உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories