விளையாட்டு

நான் T20-க்கு சரிப்பட மாட்டேனா ? -பேட்டால் பதிலடி கொடுத்த கில்..கம்பீரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல்!

தன்னை விமர்சித்த கம்பீரின் கருத்துக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்து தான் 3 வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் என்பதை கில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நான் T20-க்கு சரிப்பட மாட்டேனா ? -பேட்டால் பதிலடி கொடுத்த கில்..கம்பீரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இளம்வீரர் சுப்மன் கில் ஒருமுனையில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் தூண் போல நிலைத்து நின்று ஆடினார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

நான் T20-க்கு சரிப்பட மாட்டேனா ? -பேட்டால் பதிலடி கொடுத்த கில்..கம்பீரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல்!

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கில் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் விளையாடினார். அதிலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர் 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 63 பந்துகளில் 12 ஃபோர், 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கள் குவித்து அதகளப்படுத்தினார்.

இதன்மூலம் இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனையை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் விளையாடும் ஆட்டம் 50 ஓவர் போட்டிகள் தான் பொருந்தும், இருவது ஓவர் கிரிக்கெட்டுக்கு பொருந்தாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் விமர்சித்திருந்தார்.

நான் T20-க்கு சரிப்பட மாட்டேனா ? -பேட்டால் பதிலடி கொடுத்த கில்..கம்பீரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல்!

ஆனால், அதன்பின்னர் நடைபெற்ற போட்டியில் தனது பேட்டால் கம்பீரின் கருத்துக்கு பதிலடி கொடுத்து தான் 3 வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கெளதம் கம்பீரின் கருத்து தொடர்பாக அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories