விளையாட்டு

"நீ உம்ரான் மாலிக்கோ அல்லது சிராஜோ இல்லை" - இளம்வீரரை விமர்சித்த கௌதம் கம்பீர் ! பின்னணி என்ன ?

அர்ஷ்தீப் ஒன்றும் உம்ரான் மாலிக்கோ அல்லது முகமது சிராஜோ இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

"நீ உம்ரான் மாலிக்கோ அல்லது சிராஜோ இல்லை" - இளம்வீரரை விமர்சித்த கௌதம் கம்பீர் ! பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.

"நீ உம்ரான் மாலிக்கோ அல்லது சிராஜோ இல்லை" - இளம்வீரரை விமர்சித்த கௌதம் கம்பீர் ! பின்னணி என்ன ?

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இறுதி ஒவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. மேலும், இறுதிஓவரில் அவர் நோ பால் வீசியதும் அந்த ஒரே பந்தில் 13 ரன்கள் விலாசப்பட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரே ஒவரில் 3 நோ பால் மற்றும் அந்த போட்டியில் 4 நோ பால் வீசியதற்கு அர்ஷ்தீப் சிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அர்ஷ்தீப் ஒன்றும் உம்ரான் மாலிக்கோ அல்லது முகமது சிராஜோ இல்லை என இந்தியிற் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அர்ஷ்தீப் சிங் இவ்வளவு அதிகமான நோ பால்களை வீசுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஸ்விங்கும் பவுன்ஸும் இருக்கும். அதனால் புதிய பந்தில் ஏதாவது நடக்கும். ஆனால் இந்திய ஆடுகளங்கள் ஃபிளாட்டாக இருக்கும்.

"நீ உம்ரான் மாலிக்கோ அல்லது சிராஜோ இல்லை" - இளம்வீரரை விமர்சித்த கௌதம் கம்பீர் ! பின்னணி என்ன ?

பேட்ஸ்மேனை அச்சுறுத்தும் அளவிற்கான வேகம் அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் இல்லை. அதனால் அவர் வேரியேஷனில் கவனம் செலுத்த வேண்டும். பேட்ஸ்மேனை மிரட்டும் வேகத்தில் வீசுவதற்கு, அர்ஷ்தீப் ஒன்றும் உம்ரான் மாலிக்கோ அல்லது முகமது சிராஜோ இல்லை. எனவே நோ பால் வீசுவதை தவிர்த்து வேரியேஷன் காட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories