விளையாட்டு

"சூரியகுமார் உங்கள் இடத்தை பறித்தது குறித்து வருத்தம் உள்ளதா?" -செய்தியாளர் கேள்விக்கு சர்ஃப்ராஸ் பதிலடி!

மும்பை அணியில் தம்முடன் விளையாடி வரும் சூரியகுமார் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டதில் தமக்கு மகிழ்ச்சியே என்று சர்ஃப்ராஸ் கான் கூறியுள்ளார்.

"சூரியகுமார் உங்கள் இடத்தை பறித்தது குறித்து வருத்தம் உள்ளதா?" -செய்தியாளர் கேள்விக்கு சர்ஃப்ராஸ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

"சூரியகுமார் உங்கள் இடத்தை பறித்தது குறித்து வருத்தம் உள்ளதா?" -செய்தியாளர் கேள்விக்கு சர்ஃப்ராஸ் பதிலடி!

2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.

ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

"சூரியகுமார் உங்கள் இடத்தை பறித்தது குறித்து வருத்தம் உள்ளதா?" -செய்தியாளர் கேள்விக்கு சர்ஃப்ராஸ் பதிலடி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ்க்கு இடம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் சூரியகுமார் யாதவ் உங்களது இடத்தை பறித்து விட்டாரா என்று சர்ஃப்ராஸ் கானிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மும்பை அணியில் தம்முடன் விளையாடி வரும் சூரியகுமார் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டதில் தமக்கு மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். மேலும், சூ"ரியகுமார் யாதவ் என்னுடைய நல்ல நண்பர். மும்பை அணிக்காக விளையாடும் போது நாங்கள் நிறைய நல்ல நேரங்களை செலவிட்டுள்ளோம். அந்த சமயங்களில் நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

"சூரியகுமார் உங்கள் இடத்தை பறித்தது குறித்து வருத்தம் உள்ளதா?" -செய்தியாளர் கேள்விக்கு சர்ஃப்ராஸ் பதிலடி!

அவர் தனது வாய்ப்புக்காக நீண்ட நாள் காத்திருந்துள்ளார். அவர் தற்போது ரஞ்சிக் கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடியது அவருக்கு அணியில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. அதேபோல நானும் அனைத்து வகையான போட்டியிலும் சிறப்பாக ஆடி அணியில் இடம்பிடிப்பேன். அதிலிருந்து யாரும் என்னை தடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories