விளையாட்டு

பிராட்மேனை மிஞ்சிய சராசரி.. ஜாம்பவான்கள் தொட முடியாத சாதனை.. இருந்தும் இளம்வீரருக்கு வாய்ப்பு மறுப்பு!

ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடிவரும் சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிராட்மேனை மிஞ்சிய சராசரி.. ஜாம்பவான்கள் தொட முடியாத சாதனை.. இருந்தும் இளம்வீரருக்கு  வாய்ப்பு மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட்டுக்கு ஆணிவேர் என்றால் உள்ளூர் முதல் தர போட்டியான ரஞ்சி போட்டிதான். இந்திய அணியை குறித்து பேசுபவர்கள் நிச்சயம் ரஞ்சி போட்டி குறித்து கடந்து செல்லாமல் இருக்க முடியாது. இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்றால் அதற்கு ரஞ்சி கோப்பைதான் ஒரே வழி என்று ஒரு காலம் இருந்தது.

ஆனால், ஐபிஎல் வந்த பின்னர் இது எல்லாம் அப்படியே மாறிப்போனது. ஒரு ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியிருந்தாலே இப்போது எல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்கிறது. அதில் பலர் சில போட்டிகளில் மட்டுமே ஜொலித்து காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ரஞ்சி கோப்பை மூலம் அணியில் இடம்பெறும் வீரர்கள் அப்படி அல்ல.

பிராட்மேனை மிஞ்சிய சராசரி.. ஜாம்பவான்கள் தொட முடியாத சாதனை.. இருந்தும் இளம்வீரருக்கு  வாய்ப்பு மறுப்பு!

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பிராட்மேனை மிஞ்சிய சராசரி.. ஜாம்பவான்கள் தொட முடியாத சாதனை.. இருந்தும் இளம்வீரருக்கு  வாய்ப்பு மறுப்பு!

2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.

இந்திய அணியில் வாய்ப்புக்காக கதவை மிதிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், சர்ஃப்ராஸ் கான் கிட்டத்தட்ட அந்த கதவை அடுத்தடுத்து உதைத்த நிலையிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

பிராட்மேனை மிஞ்சிய சராசரி.. ஜாம்பவான்கள் தொட முடியாத சாதனை.. இருந்தும் இளம்வீரருக்கு  வாய்ப்பு மறுப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் பிசிசிஐ-க்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories