விளையாட்டு

"ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால் Fashion Show-க்கு செல்லுங்கள்" -BCCI-யை விமர்சித்த கவாஸ்கர்!

ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே அணிக்குத் தேவை என்றால் தேர்வுக்குழு நேராக ஃபேஷன் ஷோவுக்குச் செல்லலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

"ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால் Fashion Show-க்கு செல்லுங்கள்" -BCCI-யை விமர்சித்த கவாஸ்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

"ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால் Fashion Show-க்கு செல்லுங்கள்" -BCCI-யை விமர்சித்த கவாஸ்கர்!

2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.

இந்திய அணியில் வாய்ப்புக்காக கதவை மிதிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், சர்ஃப்ராஸ் கான் கிட்டத்தட்ட அந்த கதவை அடுத்தடுத்து உதைத்த நிலையிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

"ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால் Fashion Show-க்கு செல்லுங்கள்" -BCCI-யை விமர்சித்த கவாஸ்கர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் பிசிசிஐ-க்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே அணிக்குத் தேவை என்றால் தேர்வுக்குழு நேராக ஃபேஷன் ஷோவுக்குச் செல்லலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணி தேர்வில், வீரர்களின் கிரிக்கெட் ஆடும் திறனையும் அதற்கான உடல் தகுதியையும் மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும். வீரர்களின் உருவம், உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யக்கூடாது.

"ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே வேண்டும் என்றால் Fashion Show-க்கு செல்லுங்கள்" -BCCI-யை விமர்சித்த கவாஸ்கர்!

அப்படி ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே அணிக்குத் தேவை என்றால் தேர்வுக்குழு நேராக ஃபேஷன் ஷோவுக்குச் செல்லலாம். அங்கிருப்பவர்களை அழைத்து கிரிக்கெட் ஆட வைக்கலாம்" என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ-யை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories