விளையாட்டு

பேட்டிங்கா, பௌலிங்கா? மைதானத்தில் அனைத்தையும் மறந்து தடுமாறிய ரோஹித் சர்மா.. -வைரலான வீடியோ !

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள்போட்டியில் டாஸ் போடும்போது நடத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேட்டிங்கா, பௌலிங்கா? மைதானத்தில் அனைத்தையும் மறந்து தடுமாறிய ரோஹித் சர்மா.. -வைரலான வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் ராய்பூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி திணறியது. சமி, சிராஜ்,ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அபாரபந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

பேட்டிங்கா, பௌலிங்கா? மைதானத்தில் அனைத்தையும் மறந்து தடுமாறிய ரோஹித் சர்மா.. -வைரலான வீடியோ !

ஒரு கட்டத்தில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பிலிப்ஸ், ப்ரேஸ்வெல்,சான்ட்னர் ஆகியோரும் ஆட்டத்தால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இறுதியில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 51 ரன்களும், கில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களுக்கும் குவித்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் போடும்போது நடத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. டாஸ் வென்ற ரோஹித் சர்மாவின் பேட்டிங்கா, பௌலிங்கா என போட்டி நடுவர் கேள்வி எழுப்பிய நிலையில், ரோஹித் சர்மா இதற்கு பதில் கூற சில வினாடிகள் தடுமாறினார்.

தலையில் கை வைத்து சுமார் 10 நொடிகளுக்கு மேல் தடுமாறிய ரோஹித் சர்மா, பிறகு பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகச் கூறி சிரித்தார். அப்போது இதனை கண்ட நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதமும் சிறிது பின்னர் இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளிவந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories