விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ?

சஞ்சு சாம்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் சர்வதேச டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புகிறார் சஞ்சு சாம்சன். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்த சாம்சன், வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இருந்தாலும் இந்தத் தொடரின் மூலம் தன் இடத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள சாம்சனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் பங்கேற்கிறது இந்திய அணி.

பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடிக் கொண்டிருந்தாலும், சாம்சனுக்கு இந்திய பிளேயிங் லெவனில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இரண்டு ஃபார்மட்களிலுமே அங்கொன்றும், இங்கொன்றுமாகவே விளையாடினார். இந்திய சர்வதேச டி20 அணியில் 2015ம் ஆண்டு அறிமுகம் ஆன சஞ்சு சாம்சன், இந்த 7 ஆண்டுகளில் மொத்தமே 16 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும்தான் விளையாடியிருக்கிறார்.

சஞ்சு சாம்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ?

ஒருநாள் அரங்கிலும் 11 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார் அவர். அதேசமயம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்றாவது வீரராக விளையாடும் அவர், தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திவருகிறார். 2022 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட சாம்சன், சிறப்பாக அணியை வழிநடத்தி ராஜஸ்தானை இறுதிப் போட்டி வரை அழைத்துச்சென்றார். இருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான குமார் சங்கக்காரா, நான்காவது வீரராக விளையாடுவதுதான் சாம்சனுக்கான சரியான இடம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சு சாம்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ?

"டி20 போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கான சரியான வீரர் அவர். ஏழு ஓவர்கள் முடிந்து பிறகு களமிறங்கும் அவரால் ஆட்டத்தை அப்படியே மாற்ற முடியும். சொல்லப்போனால், அவரால் எந்தப் இடத்திலுமே விளையாட முடியும். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும்போது அவர் பல போட்டிகளில் வேவ்வேறு இடங்களில் தான் களமிறக்க்ப்படுகிறார். அவரிடம் நல்ல பலம் இருக்கிறது. அற்புதமான டெக்னிக் இருக்கிறது. சிறப்பான மனநிலை இருக்கிறது. தீர்க்கமாக, தெளிவாக விளையாடக்கூடிய ஒருவர் அவர்" என்று சாம்சன் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சங்கக்காரா.

சஞ்சு சாம்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ?

11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், 66 என்ற அற்புதமான சராசரி வைத்திருக்கிறார் சாம்சன். 2 அரைசதங்கள் அடித்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் பெரிதாக ஃபினிஷராக மட்டுமே களமிறங்கும் அவர், 135.15 என்ற அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார்.

இந்திய அணிக்காக டி20 அரங்கில் கடைசியாக ஆகஸ்ட் 2022ல் விளையாடியிருக்கிறார் சாம்சன். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு முன்பான அந்தத் தொடரில் சஞ்ச சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் டி20 உலகக் கோப்பைக்கான ஸ்குவாடில் சாம்சனால் இடம் பிடிக்க முடியவில்லை.

banner

Related Stories

Related Stories