விளையாட்டு

'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!

மயங்க் அகர்வாலை விடுவித்தற்காக பஞ்சாப் அணி நிர்வாகம் வருத்தப்படும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!

அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ஒட்டி 85 வீரர்கள் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இன்று கேரள மாநிலம் கொச்சியில் மின ஐ.பி.எல் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட அனைத்து அணியின் நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் அணிக்குத் தேவையான வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!

இந்நிலையில், தங்கள் வேலை முடிந்தவுடன் வீரர்களை கைக்கழுவி விடுவார்கள் என பஞ்சாப் அணி நிர்வாகத்தை அந்த அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ் கெய்ல், "பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வால் கண்டிப்பாக ஐ.பி.எல் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார். ஒருவேலை அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்றால் வருத்தப்படுவேன்.

பஞ்சாப் அணிக்காக பல தியாகங்களை அவர் செய்துள்ளார். இருப்பினும் அவர் அணியில் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. அவர் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டக்காரர்.

'தங்கள் வேலை முடிந்தவுடன் கைக்கழுவி விடுகிறார்கள்' : பஞ்சாப் அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் வீரர்!

பஞ்சாப் அணி நிர்வாகம் வீரர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே வந்தால் ஒரு நிரந்தரமான லெவனை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? வீரர்களுக்குள்ளே ஒரு நல்ல நேசம் இருக்காது. இது அவர்களுக்கு விளையாடும் போது அழுத்தத்தைத்தான் கொடுக்கும்" என தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories