விளையாட்டு

“அஷ்வின், உமேஷ் விக்கெட் மழை.. 227 ரன்னுக்கு சுருண்ட வங்கதேசம்” : கேப்டன் KL ராகுலின் கணக்கு பலிக்குமா?

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

“அஷ்வின், உமேஷ் விக்கெட் மழை.. 227 ரன்னுக்கு சுருண்ட வங்கதேசம்” : கேப்டன் KL ராகுலின் கணக்கு பலிக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவிக்க, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

பின்னர் ஆடிய வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் முக்கியமான நேரத்தில் 40 ரன்கள் குவித்ததோடு இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

“அஷ்வின், உமேஷ் விக்கெட் மழை.. 227 ரன்னுக்கு சுருண்ட வங்கதேசம்” : கேப்டன் KL ராகுலின் கணக்கு பலிக்குமா?

இந்நிலையில் இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

மேலும் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில், வேகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் இடம்பெற்றார். ஷான்டோ, ஜாகிர் ஹசன் இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கிய நிலையில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு சுருண்டது.

“அஷ்வின், உமேஷ் விக்கெட் மழை.. 227 ரன்னுக்கு சுருண்ட வங்கதேசம்” : கேப்டன் KL ராகுலின் கணக்கு பலிக்குமா?

இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 15 ஓவரில் 4 மெய்டன் உள்பட 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின் 21.5 ஓவரில் 3 மெய்டன் உள்பட 71 ரன்னுக்கு 4 விக்கெட், உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்துள்ளது (8 ஓவர்). கேப்டன் ராகுல் 3 ரன், கில் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதனிடையே கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை பிட்ச் பற்றி தெரியாமலே உக்கார வைத்த கேப்டன் ராகுலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இப்போது இருக்கும் அணியிலேயே அதிகம் சொதப்புவது ராகுல்தான், அதனால் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories