விளையாட்டு

உலகக்கோப்பை கனவு நீடித்த போது நன்றாக இருந்தது.. ஆனால்! -ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரொனால்டோவின் பதிவு!

தனது முகநூல் பக்கத்தில் ரொனால்டோ பகிர்ந்துள்ள பதிவு அவர் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

உலகக்கோப்பை கனவு நீடித்த போது நன்றாக இருந்தது.. ஆனால்! -ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரொனால்டோவின் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.

அதேபோல மற்றொரு போட்டியில் குரோஷியா அணி பலம்வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மொரோக்கோ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மொரோக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை கனவு நீடித்த போது நன்றாக இருந்தது.. ஆனால்! -ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரொனால்டோவின் பதிவு!

பலம்வாய்ந்த ரொனால்டோவின் போர்ச்சுகல் இந்த போட்டியில் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு தற்போதே 37 வயதாகும் நிலையில், இதுதான் அவரின் கடைசி உலகக்கோப்பை தொடர் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் ரொனால்டோ பகிர்ந்துள்ள பதிவு அவர் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அவரின் பதிவில், "போர்ச்சுகலுக்காக ஒரு உலகக் கோப்பையை வெல்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயரமான இடத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. எனது இந்த கனவை நனவாக்குவதற்காக நான் கடுமையாகப் போராடினேன். 16 வருடங்களில் உலகக் கோப்பைகளில் நான் விளையாடிய 5 தொடர்களில், பல கோல்களை அடித்து இருக்கிறேன்.

உலகக்கோப்பை கனவு நீடித்த போது நன்றாக இருந்தது.. ஆனால்! -ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ரொனால்டோவின் பதிவு!

சிறந்த வீரர்களின் பக்க பலத்தோடும், லட்சக்கணக்கான போர்த்துகீசிய மக்களின் ஆதரவையும் நான் பெற்று இருக்கிறேன். அவர்களுக்காக நான் என்னுடைய அனைத்தையும் கொடுத்தேன். தற்போது அனைத்தையும் மைதானத்திலேயே விட்டுவிட்டேன். இதுவரை போராடாமல் என்னுடைய முகத்தை நான் திருப்பியது இல்லை.

எனது கனவையும் நான் கைவிட்டது இல்லை. ஆனால், நேற்று எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது. எத்தனையோ விசயங்கள் என்னை பற்றி பேசப்பட்டன. ஏராளமான விசயங்கள் எழுதப்பட்டன. பல விசயங்கள் ஊகிக்கப்பட்டு உள்ளன.ஆனால், போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு என்பது ஒரு கணம் கூட மாறவே இல்லை என்பதை உங்களிடம் நான் தெரியப்படுத்தவும், நீங்கள் அனைவரும் இதனை அறிய வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

எனது சக வீரர்களிடம் என் நாட்டிற்காகவும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். உலகக்கோப்பை கனவு நீடிக்கும் போது நன்றாக இருந்தது... தற்போது, நல்ல ஆலோசகராகவும், ஒவ்வொருவரும் அவரவர் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் நேரம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories