விளையாட்டு

அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளர் : நடந்தது என்ன?

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளர் :  நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று காலிறுதி போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியில் பிரேசில் - குரோஷியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி பிரேசிலை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதையடுத்து அர்ஜென்டினா -நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து அர்ஜென்டினா அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இரண்டாம் பாதியில் 70-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக்கினார்.

அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளர் :  நடந்தது என்ன?

இதன் பின்னர் அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலையிலிருந்தது. போட்டியும் முடியும் நேரத்தை நெருங்கியதால் அர்ஜென்டினா வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல் அடித்து போட்டியை சமமாக்கினர்.

பின்னர் கொடுக்கப்பட்ட நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கொடுக்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்த போட்டியைக் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி இருக்கும் அதேநேரத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியை மைதானத்தில் இருந்து அமெரிக்கப் பத்திரிகையாளர் கிராண்ட் வால் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.

அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளர் :  நடந்தது என்ன?

மேலும் தனது ட்விட்டரில் நிமிடத்திற்கு நிமிடம் போட்டியின் நிலவரம் குறித்துப் பதிவிட்டு வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்குப் பாதுகாப்பில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கிராண்ட் வாலின் சகோதரர் எரிக் வால் உறுதி செய்துள்ளார். சகோதரரின் மரணம் குறித்து இணையத்தில் தெரிவித்துள்ளார். இவரின் மரணச் செய்தியைப் பார்த்த அமெரிக்கக் கால்பந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜென்டினா - நெதர்லாந்து போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமெரிக்க பத்திரிகையாளர் :  நடந்தது என்ன?

1996ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிக்கையில் கிராண்ட் வால் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில் 2012 - 2019 வரை 7 ஆண்டுகள் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories