விளையாட்டு

மெஸ்ஸி மேஜிக்..ஹீரோவான கோல் கீப்பர்.. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கால்பதித்த அர்ஜென்டினா.. !

பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மெஸ்ஸி மேஜிக்..ஹீரோவான கோல் கீப்பர்.. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கால்பதித்த அர்ஜென்டினா.. !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா -நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. அந்த அணி சார்பில் கோல் அடிக்க தொடர்ந்து சில வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. அந்த முயற்சிக்கு ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

மெஸ்ஸி மேஜிக்..ஹீரோவான கோல் கீப்பர்.. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கால்பதித்த அர்ஜென்டினா.. !

வலதுபக்கம் இருந்து பந்தை எடுத்துவந்த மெஸ்ஸி தனது முகத்தை திருப்பாமலே தனக்கு பின்பக்கம் நின்றிருந்த சகவீரர் மொலினாவுக்கு பந்தை பாஸ் செய்தார். இந்த பந்து நெதர்லாந்து அணியின் தடுப்பாட்டக்காரர்களை கடந்து மொலினாவை அடைந்த நிலையில் அவர் அதனை கோலாக்கினார். இந்த உலகககோப்பையில் கொடுக்கப்பட்ட மிகசிறந்த பாஸ் என இதனை விமர்சகர்கள் கொண்டாடி வரும் அளவு சிறப்பான கோலாக இது அமைந்தது.

பின்னர் இரண்டாம் பாதியில் 70-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் நெதர்லாந்து வீரர்கள் தவறு செய்ய அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அர்ஜென்டின நட்சத்திரம் மெஸ்ஸி கோலாக்கு அசத்த அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் இந்த போட்டியில் முன்னிலை வகித்தது.

மெஸ்ஸி மேஜிக்..ஹீரோவான கோல் கீப்பர்.. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கால்பதித்த அர்ஜென்டினா.. !

அதன்பின்னர் ஆட்டத்தின் 82 வது நிமிடம் வரை இதே கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், அரங்கில் நிறைந்திருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடத் தொடங்கினர். அனால் அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் தனக்கு வந்த பந்தை நெதர்லாந்து வீரர் வெக்ஹார்ஸ் தலையால் முட்டி கோல் அடிக்க நெதர்லாந்து அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. பின்னர் 90 நிமிடம் முடிந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அது முடிய சில விநாடிகளே இருந்த நிலையில், பிரீ கிக் வாய்ப்பை சமயோசிதமாக அதே வெக்ஹார்ஸ் மீண்டும் கோல் அடிக்க அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மெஸ்ஸி மேஜிக்..ஹீரோவான கோல் கீப்பர்.. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கால்பதித்த அர்ஜென்டினா.. !

பின்னர் வழங்கப்பட கூடுதல் நேரத்திலும் இருஅணிகளில் கோல் அடிக்காததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது. இதில் நெதர்லாந்து அணி அடித்த முதல் இரு பெனால்டியையும் அர்ஜென்டின கோல் கீப்பர் எமிலியனோ மார்ட்டினஸ் தடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

banner

Related Stories

Related Stories