விளையாட்டு

"மீண்டும் மீண்டும் அதே தவறைதான் தொடர்ந்து செய்கிறீர்கள்" -BCCI-ஐ கடுமையாக விமர்சித்த முகமது கைஃப் !

இந்திய அணியில் புதிய வீரர்களை கண்டுபிடிக்கிறோம் எனக்கூறிக்கொண்டு நல்ல வீரர்களை கைவிடுகிறோம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

"மீண்டும் மீண்டும் அதே தவறைதான் தொடர்ந்து செய்கிறீர்கள்" -BCCI-ஐ கடுமையாக விமர்சித்த முகமது கைஃப் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருப்பதால் இப்போதில் இருந்தே அணியை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

"மீண்டும் மீண்டும் அதே தவறைதான் தொடர்ந்து செய்கிறீர்கள்" -BCCI-ஐ கடுமையாக விமர்சித்த முகமது கைஃப் !

இதற்காக வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி இப்போதே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனால் அணியில் இளம்வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அணித்தேர்வு குறித்த விவகாரத்தில் பிசிசிஐ தவறு செய்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "இந்திய அணியில் புதிய வீரர்களை கண்டுபிடிக்கிறோம் எனக்கூறிக்கொண்டு நல்ல வீரர்களை கைவிடுகிறோம். இந்தியாவுக்கு தற்போதைய பிரச்சினையே பவுலிங்தான். நியூசிலாந்துடனான 2வது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாக்கூர் ஆடவில்லை. முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஷர்துல் தொடர்ந்து அணியில் ஆடியிருக்க வேண்டும். அப்போதுதான் அவரின் திறன் வெளியே தெரியும்.

"மீண்டும் மீண்டும் அதே தவறைதான் தொடர்ந்து செய்கிறீர்கள்" -BCCI-ஐ கடுமையாக விமர்சித்த முகமது கைஃப் !

இதுதவிர புவனேஷ்வர் குமார் அணியில் ஏன் இல்லை என்றே புரியவில்லை. அணியில் சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவுக்கொடுக்கிறீர்கள் என்றால், தயவு செய்து அதனை சரியாக செய்யுங்கள். புதிதாக முயற்சி செய்து பார்க்கிறேன் என்று நினைத்தால், உலகக்கோப்பையின் போது சிக்கல் உண்டாகும். மீண்டும் மீண்டும் அதே தவறுதான் பிசிசிஐ செய்கிறது.

பவுலிங் யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் பும்ராவை தவிர மற்ற 3 பவுலர்களும் மணிக்கு 135 கிமீ வேகத்தில் தான் வீசுகின்றனர். எனவே உம்ரான் மாலிக் போன்ற வீரரையும் தற்போது இருந்தே வாய்ப்பு கொடுத்து தயார் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories