விளையாட்டு

அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி.. #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்ஸிகோ அணிக்கு எதிரான போட்டியில் 0-2 என்ற கணக்கில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி..  #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் சவூதி அரேபியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.

அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி..  #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?

ஆனால் இது இரண்டாம் பாதியில் அப்படியே மாறியது. ஆட்டத்தின் 47-வது நிமிடதட்டில் சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி ஒரு கோலும் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி மற்றொரு கோலும் அடித்தனர். இதற்கு அர்ஜென்டின அணியால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில் சவூதி அரேபிய 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், நேற்று அர்ஜென்டின அணி தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் வலுவான மெக்ஸிகோ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அர்ஜென்டினா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறிப்போடு இருக்கும் என்பதால் இந்த போட்டி இறுதிப்போட்டிக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியது.

அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி..  #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?

இதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அர்ஜென்டினா அணி அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெக்ஸிகோவின் தடுப்பரண் மிக மிக வலுவாக அமைந்தது. அதனை உடைத்து முதல் பாதி முழுக்க அர்ஜென்டினா வீரர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இதனால் முதல் பாதி கோல் முடிக்கப்படாமல் சமனில் முடிவடைந்தது.

முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியால் கோலை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கமுடியவில்லை. மெஸ்ஸியை சுற்றி எப்போதும் ஒரு மெக்ஸிகோ தடுப்புவீரர் இருந்த நிலையில், மற்ற வீரர்களின் முயற்சி பெரிய அளவில் சோபிக்கவில்லை. மெஸ்ஸி அவ்வப்போது உருவாக்கிய வாய்ப்புகளை கூட பிற அர்ஜென்டினா வீரர்கள் வீணடித்தனர். இத்தனைக்கும் தடுப்பாட்டம் ஆடிய மெக்ஸிகோ வீரர்கள் கூட அர்ஜென்டினா கோல் போஸ்டை நோக்கி ஷாட்களை அடித்திருந்தனர்.

இதனால் இரண்டாம் பாதி தொடங்கின்போது அரங்கில் குழுமியிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் கூட சோகத்தில்தான் இருந்தனர். முதல் பாதியில் இருந்த உற்சாகத்தில் பாதிகூட அவர்களிடம் இல்லை. அர்ஜென்டின வீரர்கள் முகாமிலும் அந்த கவலை தெரிந்தது.

ஆனால், இது எல்லாம் ஆட்டத்தின் 63-வது நிமிடம் வரை மட்டும்தான். அந்த நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து டி மரியா கொடுக்க பாஸை பெனால்டி பாஸ்க்கு வெளியே இருந்து கோல் போஸ்டின் இடதுபக்கத்தை நோக்கி மெஸ்ஸி அடித்த பந்து கோல் கீப்பரை தாண்டி கோலாக அடுத்த நொடி அரங்கமே அதிர்ந்தது. மெஸ்ஸி தனது ட்ரேட் மார்க் கொண்டாட்டத்தில் ஈடுபட போட்டி நடைபெறும் மைதானத்தை தாண்டி உலகெங்கும் உள்ள மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

இதன் பின்னர்தான் அர்ஜென்டின அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. அவ்வப்போது கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மெக்ஸிகோ அணியும் பதில் கோல் அடிக்க முயன்றாலும் அவர்களாலும் பெரிய அளவில் ஏதும் செய்யமுடியவில்லை. பின்னர் ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பு அர்ஜென்டினா அணிக்கு கிடைத்தது.

ஆனால், இதனை நேரடியாக பெனால்டி பாஸ்க்கு அடிக்காமல் மெஸ்ஸிக்கு பாஸ் அளித்தார் டீ பால். அந்த பந்தை மெஸ்ஸி என்ஸோ பெர்னாண்டஸ்க்கு கொடுக்க அவர் அதனை அழகாக கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணி மேற்கொண்டு மெக்ஸிகோ அணியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது.

முடிவில் 2-0 என்ற கணக்கில் இந்த போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. இறுதிசுற்று போட்டியில் போலந்து அணியை சந்திக்கவுள்ள அர்ஜென்டினா அணி அந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்யும். அதேநேரம் அந்த போட்டி டிரா ஆனால் சவூதி அரேபியா-மெக்ஸிகோ மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். ஒருவேளை போலந்து அணியோடு அர்ஜென்டினா அணி தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

தனிப்பட்ட முறையில் போட்டியை வேண்டுகொடுக்கும் பல வீரர்கள் அந்த அணியின் இருந்தாலும் ஒரு அணியாக அர்ஜென்டினா மெஸ்ஸியை சார்ந்தே இருக்கிறது. இப்போது மட்டும் அல்ல, சுமார் 10 ஆண்டுகள் அந்த அணியின் நிலை அதுதான். தனிப்பட்ட முறையில் மெஸ்ஸி அதிசயத்தை நிகழ்த்தினால் தான் அந்த அணியால் வெற்றிபெற முடிகிறது. இதுதான் முக்கியமான போட்டிகளில் அர்ஜென்டின அணியின் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது.

அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி..  #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?

மெக்ஸிகோ அணிக்கு எதிரான போட்டியில் கூட டி மரியா கொடுத்த பாஸை மெஸ்ஸி தனது தனிப்பட்ட திறன் காரணமாகத்தான் கோல் அடித்தார். அதேபோல இரண்டாவது கோல்க்கு அசிஸ்ட் செய்ததும் மெஸ்ஸிதான். ஒரு வேலை மெஸ்ஸி ஒரு போட்டியில் சொதப்பினால் அந்த அணிக்கு அது மிக பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்.

banner

Related Stories

Related Stories