விளையாட்டு

இதெல்லாம் பொய்யா கோபால் ? சவூதி அரேபிய வீரர்களுக்கு ROLLS ROYCE எல்லாம் கிடையாதாம்.. வதந்தி என விளக்கம் !

அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலை சவூதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி மறுத்துள்ளார்.

இதெல்லாம் பொய்யா கோபால் ? சவூதி அரேபிய வீரர்களுக்கு ROLLS ROYCE எல்லாம் கிடையாதாம்.. வதந்தி என விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவூதி அரேபியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.

இதெல்லாம் பொய்யா கோபால் ? சவூதி அரேபிய வீரர்களுக்கு ROLLS ROYCE எல்லாம் கிடையாதாம்.. வதந்தி என விளக்கம் !

ஆனால் இது இரண்டாம் பாதியில் அப்படியே மாறியது. ஆட்டத்தின் 47-வது நிமிடதட்டில் சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி ஒரு கோலும் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி மற்றொரு கோலும் அடித்தனர். இதற்கு அர்ஜென்டின அணியால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில் சவூதி அரேபிய 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியை உலகக் கோப்பையையே வென்று விட்ட அளவிற்கு சவூதி அரேபிய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால்இந்த வெற்றியை தங்கள் நாடே கொண்டாட வேண்டும் என பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தது சவூதி அரேபிய அரசு.

இதையடுத்து அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்ற சவூதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலை சவுதி அரேபிய கால்பந்து வீரர் சாலா அல்ஷெக்ரி மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் உங்களுக்கு எந்த கலரில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வேண்டும் என்று கேட்டபோது ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்ற தகவலே பொய்யானது என்று கூறினார். மேலும், "எங்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், சிறந்ததைச் செய்யவுமே நாங்கள் இங்கு வந்துள்ளோம், அதுவே எங்களின் மிகப்பெரிய சாதனை" என அவர் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories