விளையாட்டு

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?

உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 2 முறை சாம்பியனான லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவுடன் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் முதல் போட்டியில் ஈக்வடார் அணி போட்டியை நடத்தும் நாடான கத்தாரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானையும் நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஆப்ரிக்க சாம்பியன் செனக்கல் அணியையும் வீழ்த்தியது.அதைத் தொடர்ந்து அமெரிக்கா வேல்ஸ் அணிகள் மோதிய போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது.

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி இன்று சவூதி அரேபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது.

அர்ஜென்டினாவில் முன்கள வீரர்கள் மெஸ்ஸி,மார்ட்டினஸ், டி மரியா, கோமஸ் ஆகியோர் சவூதி அரேபியாவின் கோல் கம்பத்தையே சுற்றிவளைத்தனர். ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?

அதன்பின்னர் 28 நிமிடத்தில் அர்ஜென்டின வீர்ர் மார்ட்டினஸ் அடித்த கோல் VAR-ல் மறுக்கப்பட்டது. இந்த வகையில் முதல் பாதி அர்ஜென்டின ஆதிக்கத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனால் இரண்டாம் பாதியில்தான் உலகத்துக்கே ஆச்சரியம் காத்திருந்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் (47-வது நிமிடம் ) சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி இடதுபுறத்தில் இருந்து ஒரு அருமையான கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி அதே இடதுபுறத்தில் இருந்து கோல் அடித்து சவூதி அரேபியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்ததோடு அரங்கத்தில் குழுமியிருந்த அர்ஜென்டின ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?

அதுவரை பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டின வீரர்கள் அதன்பின்னர் பதற்றத்தில் பந்தின் கட்டுப்பாட்டை இழக்கத்தொடங்கினர். அணியிடையே பெரிய அளவில் பதற்றமும் தெரிந்தது. இறுதியில் அதே கோல் கணக்கில் 90 நிமிடமும் முடிய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் அர்ஜென்டின வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

இரண்டு அருமையான கோல் வாய்ப்புகளை சவூதி அரேபிய கோல் கீப்பர் மொஹம்மத் அல் ஓவாஸிஸ் தடுத்தார். மேலும் அவரை தாண்டி கோல் நோக்கி சென்ற பந்தை சவூதி அரேபிய தடுப்பாளர் தடுத்தது பிரமிப்பை ஏற்படுத்தியது. இறுதியில் நடுவர் ஆட்டத்தை முடிக்கும் விசிலை ஊத அரங்கம் மட்டுமின்றி உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

நம்பமுடியாத தோல்வி.. முடிவுக்கு வந்த மெஸ்ஸியின் சாதனை.. 2010-ல் ஸ்பெயின் போல மீண்டெழுமா அர்ஜென்டினா ?
Laurence Griffiths

பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 3ம் இடம் இருக்கும் நிலையில், சவூதி அரேபியா 51-வது இடத்தில் உள்ளது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வரை 36 போட்டிகளில் தொடர்ந்து தோற்காமல் இருந்த அர்ஜென்டின அணியின் சாதனையும் இதோடு முடிவுக்கு வந்தது. இன்னும் இரண்டு போட்டிகளில் தோற்காமல் இருந்து இருந்தால் இத்தாலியின் 37 போட்டிகளில் தோற்காமல் இருந்த சாதனையை அர்ஜென்டினா முறியடித்திருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆட்டத்தின் 69% நேரம் பந்தை அர்ஜென்டினா தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தது. ஆனால் கோலை நோக்கி வெறும் 15 ஷாட்கள் அடிக்கப்பட்ட நிலையில், அதில் 6 ஷாட்கள் தான் துல்லியமானது. இது போன்ற தவறால்தான் அர்ஜென்டினா இந்த போட்டியை இழக்க காரணமாக இருந்துள்ளது.

அர்ஜென்டினா இருக்கும் சுற்றில் சவூதி அரேபியா தவிர மெக்ஸிகோ, போலந்து போன்ற நாடுகள் இருக்கின்றன. இரண்டுமே சவூதி அரேபியாவை விட வலிமையான அணிகள் என்பதால் அதில் ஒரு போட்டியில் தோற்றாலே அர்ஜென்டினா இந்த தொடரில் இருந்து வெளியேறும் சோகமான முடிவு ஏற்படும். அதே நேரம் 2010ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்பெயின் தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில, அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து கோப்பையை வென்றது. அதேபோன்ற ஒரு நிலை அர்ஜென்டினாவுக்கு நடக்கவேண்டும் என உலகெங்கும் உள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories