விளையாட்டு

IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?

இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியல் தொடர்பான தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 16வது ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி இடம் பெற்றுள்ளார். மேலும் கடந்த முறை கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு அது மோசமான சீசனாக இருந்தது.

IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?

இதனால் அவர் அடுத்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியில் இருப்பாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அணி பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது சி.எஸ்.கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டுவைன் பிரோவோ விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது. இவரை போலவே ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஆசிப் ஆகிய 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?

CSK அணி விவரம்:-

தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோர் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories