
செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி அதானியிடம் அதிக விலையில் யூனிட் 1-க்கு ரூ.41 க்கு வாங்க துடிப்பதன் மர்மம் என்ன CM Sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தி.மு.க ஆட்சியில் அனல், புனல், காற்றாலை
மற்றும் சோலார் மின் உற்பத்தி மூலமும் நீண்டகால ஒப்பந்தம் மூலம் (ரூ4.91,ரூ5.50) குறைந்த விலையில் 2028,2029 வரை 2800MW மின்சாரம் வாங்கியதாலும் அதிக பட்சம் 21,800MW மின்தேவையை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மின்தட்டுப்பாடு, மின்வெட்டு இல்லாமலும் மற்றும் அதிக மின்கட்டண உயர்வு இல்லாமலும் நல்லாட்சி நடத்தியது நினைவிருக்கிறதா CM Sir?
த.வெ.க ஆட்சிக்கு வந்ததும் TNEB க்கு சொந்தமான மின் உற்பத்தியை 30% மாக குறைத்தும், குறைந்தவிலை ஒப்பந்தத்திலுள்ள 1000MW மின்சாரத்தை வாங்காமலும் செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி அதானியிடம் அதிக விலையில் யூனிட் 1-க்கு ரூ41 க்கு வாங்க துடிப்பதன் மர்மம் என்ன CM Sir?
தி.மு.கழக ஆட்சியில் உடன்குடியில் 660×2 MW மின்திட்டத்தையும்,அதன் தேவைக்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு ரூ13,500 கோடியில் உருவாக்கப்பட்ட சிறு துறைமுகத்தையும் அதானிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்க நினைப்பது அச்சமா? அல்லது ஆந்திராரெட்டி கேங்கின் திட்டமா CM Sir?
தி.மு.கழக ஆட்சியில் தன்னிறைவு பெற்ற மின்சார வாரியத்தை ஆறு மாத காலத்தில் ரூ2.5 இலட்சம் கோடிக்கு மேல் கடனாக்கி மேலும் அதானியிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி கடனை அதிகப்படுத்தி சென்னை விமான நிலையம்,தூத்துக்குடி துறைமுகம் போல் தமிழ்நாடு மின்சார வாரியத்தையும் அதானிக்கு வழங்க உங்கள் டெல்லி பிரதிநிதி வெங்கட்ரமணா பேசி முடித்துவிட்டாரா? அதற்காக கையூட்டு பெற்றதாக பேசப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை எந்த நாட்டில் பதுக்கி வைத்துள்ளீர்கள் CM Sir...
தமிழ்நாட்டுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்வாரியத்தை அதானிக்கு தாரைவார்க்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மறந்து விடாதீர்கள் CM Sir?" கேள்வி எழுப்பியுள்ளார்.






