விளையாட்டு

நெய்மர் ரசிகன்டா நான்.. பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த முரட்டு ரசிகர் ! கேரளாவில் பரபரப்பு !

சாலையில் வந்துக்கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெய்மர் ரசிகன்டா நான்.. பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த முரட்டு ரசிகர் ! கேரளாவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அதன் தீவிரம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தியாவில் கேரளா, கோவா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் கால்பந்து புகழ்பெற்று விளங்குகிறது. அந்த இடங்களில் தீவிர கால்பந்து ரசிகர்கள் பலர் நிரப்பியுள்ளனர்.

இந்த நிலையில், கேரளத்தில் கால்பந்து வெறியர் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தீவிர கால்பந்து வெறியராக இருந்து வருகிறார்.

நெய்மர் ரசிகன்டா நான்.. பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த முரட்டு ரசிகர் ! கேரளாவில் பரபரப்பு !

இவர் நேற்று மாலை ராஜேஷ் சாலையில் வந்துக்கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்றுள்ளார். இவர் எதிரில் வருவதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை மெதுவாக்கியுள்ளார். ஆனாலும் வேகமாக பேருந்து நோக்கி ஓடிவந்த ராஜேஷ் கால்பந்தில் பந்தை தலையால் முட்டுவதைப் போல பேருந்தின் முன்பாக கண்ணாடி மீது வேகமாக மோதியுள்ளார்.

இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், ராஜேஷும் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், சாலையில் அமர்ந்தவர் பின்னர் வேகமாக பேருந்தின் உள்ளே ஏறியுள்ளார். தொடர்ந்து டிரைவரின் இருக்கைக்கு சென்ற அவர் சத்தம்போட்டு பின்னர் இருக்கையில் கால்களை நீட்டி பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் தீவிர ரசிகன் என கத்தியத்தோடு, பேருந்து அர்ஜென்டினா அணியின் சீருடை நிறத்தில் இருந்ததால் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக கூச்சலிட்டுள்ளார்.

தொடர்ந்து இவர் குறித்த தகவல் போலிஸாருக்கு கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் காவல்நிலையம் வந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதிசெய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையால் அவரின் செயல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories