விளையாட்டு

CHOCKERS : நீங்க இன்னொரு தென்னாபிரிக்காவாடா ? நியூஸிலாந்து அணியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் !

முக்கியமான போட்டியில் தென்னாபிரிக்க அணியை போல தோல்வியடைந்து வெளியேறும் நியூஸிலாந்து அணியை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

CHOCKERS : நீங்க இன்னொரு தென்னாபிரிக்காவாடா ? நியூஸிலாந்து அணியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் ரன்கள் குவித்தது.

CHOCKERS : நீங்க இன்னொரு தென்னாபிரிக்காவாடா ? நியூஸிலாந்து அணியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் !

அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், நடுவரிசை வீரர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 53 ரன்கள் குவிக்க, கேன் வில்லியம்சன் மெதுவாக ஆடி 46 ரன்கள் குவித்தார்.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான அதிரடி தொடக்கத்தை வழங்கினர். நியூசிலாந்து வீரர்களால் இந்த இணையை பிரிக்க முடியாத நிலையில், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் பாபர் அசாம் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரரான முகமது ரிஸ்வான் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

CHOCKERS : நீங்க இன்னொரு தென்னாபிரிக்காவாடா ? நியூஸிலாந்து அணியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் !

இதனால் இறுதியில் 19.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நியூசிலாந்து அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.

எப்படி முக்கியமான போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவி வெளியேறுமோ அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து முக்கிய கட்டத்தில் தோல்வியைத் தழுவிவருகிறது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் நியூசிலாந்து அணியை கலாய்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories